×

குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

பெரம்பலூர்,மே8: குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர் அரசு (மகளிர்) கலை அறிவியல் கல்லூரி களில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20ம்தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லாம். கல்லூரி முதல்வர்கள் ரேவதி, சேகர்(பொ), மணி மேகலை என தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய இடங்களில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதன்படி பெரம் பலூர் அருகேவுள்ள குரும்பலூரில் இயங்கிவரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 7கலைப்பிரிவு பட்ட வகுப்புகளும், 7 அறிவியல் பிரிவு பட்ட வகுப்புகளும் என மொத்தம் 14 இளநிலைப் பட்ட வகுப்புகள் உள்ளன. இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 4 கலைப்பிரிவு பட்ட வகுப்பு களும், 6 அறிவியல் பிரிவு பட்ட வகுப்புகளும் என மொத்தம் 10 இளநிலை பட்டவகுப்புகள் உள்ளன. வேப்பூர் அரசு (மகளிர்) கலை அறிவியல் கல்லூரி யில்4 கலைபிரிவு பட்ட வகுப்புக ளும், 5 அறிவியல் பிரிவு பட்ட வகுப்புகளும்என மொத்தம் 10 இளநிலைப் பட்டவகுப்பு கள் உள்ளன.

தமிழகத்தில் கடந்த 6ம் தேதி பிளஸ்-2 எனப்படும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024- 2025) விண் ணப்பங்களை www.tngasa.in < http://www.tngasa.in/ > என்ற இணை யதள முகவரியில் மே 6ம் தேதி முதல் வருகிற 20ம் தேதிவரை பதிவு செய்ய லாம். விண்ணப்பங்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு வருகிற 24ம் தேதி அனுப்பப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள \”மாணவர் உதவி மையங்கள்\” மூலம் விண் ணப்பிக்க வழிவகை செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பக் கட்டணமாக ரூ48, பதிவுக் கட்டணமாக ரூ2 என மொத்தம் ரூ 50ஐ செலுத்த வேண்டும்.

இதில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் (ரூ2 மட்டும்) செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட் டணம் மற்றும் பதிவுக் கட்ட ணத்தை விண்ணப்ப தாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணைய தளம் வாயிலாகவும் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல் லூரி மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் \”The Director, Directorate of Collegiate Education, Chen nai என்ற பெயரில் மே 6ம் அல்லது அதற்கு பின்னர் பெற்ற, வங்கி வரைவோ லையை(டிடி) அளிக்கலாம் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற் றும் கால அட்டவணை தமி ழக அரசின் உயர் கல்வித் துறையால் வெளியிடப் பட் டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண் ணப்பித்த மாணவர்களின் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு தகுதி, முன்னாள் ராணுவ வீரர்வாரிசுஅடிப்படையில்) மே 28ம் தேதி முதல் 30 ம் தேதி வரையாகும். மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல், ஜூன் 15ம் தேதி வரை நடை பெறுகிறது. 2ம் பொது கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு ஜூலை 3-ஆம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்க தமி ழக அரசின் உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என கல்லூரிகளின் முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

The post குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Kurumbalur ,Vepanthatta ,Veypur Govt Arts and Science Colleges ,Perambalur ,Veppanthatta ,Veppur Government (Women) Arts and Science Colleges ,Revathi ,Shekhar ,Mani Mekalai ,Veypur government arts and science colleges ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய